ஆண்டவா!
இயற்கையை படைத்தாய்
அதற்கொரு
நியதியை வகுத்தாய்
கரையை அலைகள்
தழுவுமே என்றாய்
இயற்கையின் நீதியிது
இன்பமே என்றாய்
கரையைப் புயல்கள்
கடக்குமே என்றாய்
இயற்கையின் நீதியிது
பொறுத்துக்கொள் என்றாய்
சிற்றலைகளை கொண்ட
கரையினை கண்டு
உன்மழலைகள் சென்று
களித்தனர் நன்று
களித்தனர் களித்த வேளையிலே
மாண்டனர் மருண்டு சிலைபோலே
புயல் மட்டும் கரையை கடக்குமென்றாய்
இங்கு கடலே கரையை கடந்ததய்யா
நியதியை மீறியவள் கடல் அய்யா
நீதிமன்றத்தில் அவளை நிறுத்தய்யா
அடக்கம் வேண்டும் உனக்கென்று
அறிவுறை அவளிடம் சொல்லய்யா
For TSUNAMI relief efforts :
http://www.indianredcross.org/donation.html
http://www.udavumkarangal.org/tsunami.asp
https://secure.ga3.org/02/asia_earthquake04
Wednesday, December 29, 2004
Saturday, December 25, 2004
தமிழ்நாட்டை முன்னேற்ற..! - கனவு 2: பரந்து விரிதல்
கல்லூரி படிப்புக்காக நான் சென்னை சென்றவன். படித்து முடித்து விட்டு சென்னையிலே வேலை செய்தேன். அப்போது என்னுடன் தங்கியிருந்த என்னுடைய ரூம் மேட்ஸ், மற்றும் பல நண்பர்கள் அனைவரும் என்னைப் போலவே வெளியூரிலிருந்து வந்தவர்கள் தான்.
இப்படி வந்தவர்களில் 99% பேர் சென்னையில் செட்டிலாகிவிட்டனர். ஏன்? சென்னையில் தான் வேலை வாய்ப்பு அதிகம்.
இவ்வளவு பெரிய தமிழ் நாட்டில் வேலை வாய்ப்பு நிறைய உள்ள ஊர்கள் எத்தனை? ஒரு ஐந்து அல்லது ஆறு? மிஞ்சிப் போனால் ஒரு பத்து ஊர்கள்?
ஆக, சொந்தமாக விவசாய நிலபுலன்கள் உள்ளவர்கள் அல்லது சொந்தமாக வியாபாரம் செய்பவர்கள், இவர்களை தவிர மற்ற அனைவருக்கும் இந்த பத்து ஊர்கள் தான் கதி.
இதில் குறிப்பாக சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் போன்ற ஊர்கள்தான் டாப் FOUR. பாவம் இந்த ஊர்கள். எத்தனை பேரைத் தாங்க வேண்டும். எவ்வளவு தண்ணீர் சுரக்க வேண்டும். வெளியூர்களிலிருந்து லாரியில் தண்ணீர் கொண்டு வருவதெல்லாம் சும்மா.
இதனை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்ய வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக, பரவலாக இன்னும் ஒரு முப்பது ஊர்களை முதற் கட்டமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த முப்பதில் கிராமங்கள் ஐந்தாவது இருக்க வேண்டும். இந்த ஊர்களிலோ அல்லது இவைகளை சுற்றியிருக்கும் இடங்களிலோ மிக PLANNEDடா BUSINESS CITIES கட்ட வேண்டும். அங்கு பல வசதிகள் இருக்க வேண்டும். ஆனால் முக்கியமாக ஒன்று. இதற்காக விவசாய நிலங்களை அழிக்க கூடாது. எதிலும் BALANCE முக்கியம்.
பல பெரிய கம்பனிகளை இந்த இடங்களில் முக்கிய கிளைகளை ஆரம்பிக்க ஊக்குவிக்க வேண்டும். அதில் வேலை செய்பவர்களுக்கு நல்ல QUARTERS தங்குவதற்கு வேண்டும். அங்கங்கு நல்ல SHOPPING MALL கட்ட வேண்டும்.
இதனால் மக்கள் தொகை சென்னை, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் மட்டும் ஒரேடியாகக் கூடாமல், பரவலாக பரந்து விரியும். தண்ணீர் பிரச்சினை தீரும்.
ஒரு பத்து வருடம் இந்த முப்பது ஊர்களை முன்னேற்ற செயல் திட்டம் வேண்டும். அடுத்த பத்து வருடங்களில் மற்றுமொரு முப்பது ஊர்கள் கொண்ட திட்டம் போடனும்.
ஐம்பதே வருடங்களில் நூற்றைம்பது BUSINESS CITIES தமிழ்நாட்டில் இருக்கும். அப்புறம் வறுமையாவது, திண்டாட்டமாவது? அப்படியென்றால் என்ன என்று நமது வருங்கால சந்ததியினர் கேட்பர்.

Thursday, December 23, 2004
தமிழ்நாட்டை முன்னேற்ற..! - கனவு 1: ரோடு
"இந்த ஊழல் பெருச்சாளிங்களால் தான் நம்ப மாநிலம் முன்னேறாம இருக்கு..."
"அரசியல்வாதிங்க தான் நாட்டை குட்டி சுவராக்குகிறாங்க.."
"ஜனங்க சரியில்லை.."
நம்ப நாட்டை எப்படி முன்னேற்றனும்னு கேட்டா, பெரும்பாலும் மேலே சொன்ன வாக்கியங்கள் தான் பதிலாக வரும். ஆனா, நல்லா யோசிச்சு பார்த்தா, இவையெல்லாம் 'நம்ப நாடு எப்படி கெட்டுப்போய்க்கொண்டு இருக்கிறது"ங்கிறதுக்கான பதில்கள்.
ஒரு வகையில பார்த்தா, இவைகளை சரி செய்தாலே போதும். நாடு முன்னேறிவிடும். ஆனாலும், இந்த கட்டுரையில அவைகளை பற்றி பேசப்போறதில்லை.
சும்மா, என்னென்னல்லாம் நம்ப தமிழ் நாட்டுல (இப்போதைக்கு தமிழ்நாடு மட்டும் - அப்புறம் இந்தியா முழுவதையும் கவர் பண்ணலாம்) இருந்தா ஜாலியா இருக்கும், நல்லா இருக்கும், வசதியா இருக்கும், முன்னேற்றமா இருக்கும்ன்னு பார்க்கலாம்.
நான் பெருமதிப்பு வைச்சிருக்கும் நம்ப ஜனாதிபதி திரு.அப்துல் கலாம் அவர்கள் நம்பளையெல்லாம் கனவு காணச்சொன்னார்கள். நம்ப நாட்டை முன்னேற்றுவதைப்பத்தி நானும் கனவு காணலாம்னு நினைச்சேன். நிறைய கனவுகள் வந்துச்சு.
அதுல ரொம்ப சின்னசின்ன கனவுகள்லேர்ந்து தொடங்குகிறேன்.
ரோடு:
ரொம்ப சிம்பிள். தமிழ் நாட்டிலிருக்கிற முக்கிய நகரங்களை இணைக்கிறதுக்கு ஒரு ரொம்ப அட்வான்ஸ்டான ரோடு வேண்டும். அந்த ரோடு எப்படி இருக்கனும்னா...
* ஆக்ஸிடெண்ட்ங்கிற ஒரு விஷயமே இல்லாமல் இருக்கிற டிஸைன்ல இருக்கனும். சென்னையிலிருந்து 1000 பேர் கிளம்பி மதுரைக்கு போனா, அதுல 999 பேர் பத்திரமா போய் சேர்ந்தாங்க, ஒருத்தர் மட்டும் கவனிக்காம கீழ விழுந்ததினால வெறும் சிராய்ப்பு மட்டும் ஏற்பட்டது, அவரையும் Highways Patrol உடனே வந்து கவனிச்சிக்கிட்டாங்கன்னு இருக்கனும்.
* ஒவ்வொரு ஸைடுலயும் நாலு வழிப்பாதைகள் (Four Lanes) இருக்கனும்.
* முடிஞ்சா முழுக்க முழுக்க FLY-OVER bridgeஆ இருக்கலாம் (குறுக்க போகிற ஆடு மாடுகள் பிரச்சினை இருக்காது). சென்னையில் ஏறினால் முதல் EXIT வந்து தாம்பரம், அப்புறம் செங்கல்பட்டுன்னு இருக்கனும். நடுவுல REST AREA இருக்கனும், கூடவெ ஆம்புலன்ஸ் ஸர்வீஸ் நிறைய இருக்கனும்.

* ரோட்டுல இந்த பக்கம் நாலு பாதை. நடுவுல பலமான தடுப்புச்சுவர், அப்புறம் அந்த பக்கம் நாலு பாதைன்ன்னு இருக்கனும்.
* முடிஞ்சா இந்த ரோட்டை ஒட்டியபடியே பக்கத்துல இன்னொரு ரோடு இருக்கனும். அதுலெ இந்த பக்கம் இரு வழிப்பாதை, அந்த பக்கம் இரு வழிப்பாதைன்னு இருக்கனும். இது வெறும் பைக்ல போறவங்களுக்கான ரோடா இருக்கனும்.
* இதுக்கெல்லாம் நிறைய பணம் தேவைப்படும். நல்ல தனியார் நிறுவனங்களிடம் இந்த வேலையை விட வேண்டும். அவங்க பிறகு TOLL சார்ஜ் பண்ணிக்கலாம்.
* கோயம்புத்தூர்ல செய்யப்படற பொருள்கள் ரொம்ப ஈஸியா சென்னைக்கு ஏற்றுமதி செய்யப்பட வரனும்.
* கன்னியாகுமரி வரைக்கும் NETWORK ரொம்ப பலமா இருக்கனும்
..ம்ம் அப்புறம் முழிச்சிகிட்டேங்க...
Subscribe to:
Posts (Atom)